புதுக்கோட்டையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பதவிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கேங்மேன் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 8 நாட்களாக புதுக்கோட்டை சிப்காட் மின்வாரிய தொகுப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த தேர்வில், ஆயிரத்து 628 பேர் பணிக்காக பதிவு செய்தனர். இதில் நாளொன்றுக்கு 204 பேரை தேர்வுக்கு அனுமதிப்பதாகவும், இதுவரை 156 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 124 பேருக்கான உடல் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post