தமிழகத்தில் இம்மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி, மாநில தேர்தல் ஆணையம், சனிக்கிழமை அன்று, புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது . இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் மனு தாக்கல் செய்ய டிசம்பர் 16ம் தேதி கடைசி நாள் என்றும், வேட்பு மனுக்கள் டிசம்பர் 17ம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும், மனுக்களைத் திரும்பப் பெற டிசம்பர் 19ம் தேதி கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Discussion about this post