கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், உதகை நகரில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை அதிகரித்துள்ளது.
வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள, கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களது வீடுகளின் முன், பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட ஸ்டார்களை தோரணம் கட்டியும், இயேசு பிறப்பை நினைவுபடுத்தும் வகையில், குடில் அமைத்தும் வருகின்றனர். இந்தநிலையில், உதகை நகரின் புத்தகக் கடைகள், அழகு சாதன கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை களைகட்டி உள்ளது. இந்த ஸ்டார்கள், 30 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை, வடிவங்களுக்கு ஏற்றாற்போல் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, இரண்டு வாரங்களே உள்ளதால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஸ்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post