அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பப்பட்ட பலூன் தற்போது வளிமண்டலத்திற்கு மேலே
சுற்றிக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிபர் டிரம்ப் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்யும் பலூனில் பேபி டிரம்ப் எனப்படும் டிரம்ப் உருவம் தாங்கிய பலூன் பறக்கவிடப்பட்டது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட அந்த பலூன், வளிமண்டலத்திற்கு மேலே பறந்து சென்றது. தற்போது அந்த பலூன் பூமியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. பலூன் அருகே வைக்கப்பட்டிருந்த கேமராவிலிருந்து படங்களும் வீடியோக்களும் தற்போது நல்ல முறையில் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது.
Discussion about this post