நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெங்காயம் கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. தற்போது, வெங்காய விலை உயர்வு, விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் கூட்டம் வியாழக் கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில், துருக்கி மற்றும் எகிப்தில் இருந்து 21 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்காக அரசு நிறுவனமான எம் எம் டி சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், வரும் ஜனவரியின் மத்தியில் வெங்காயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் அவினாஷ் ஸ்ரீவாஸ்தவா கூட்டத்தில் விளக்கியதாக கூறப்படுகிறது. மேலும், வெங்காயத்தை இருப்பு வைப்பதற்காக மொத்தம் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கான வரம்பு முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post