சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேற்று கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, கோயில் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையை மேற்கொண்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்துக்கு சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது ஹனீப் பாகவி என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்தது. கடிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், கோயில் நிர்வாகம் உடனே மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் கடிதத்தை ஒப்படைத்தது. கடிதத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால், கோயில்களை குண்டு வைத்து தகர்ப்பேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு நிபுணர்களை வைத்து கோயில் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. ஆயினும், இச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post