தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையாலும், தமிழக அரசு மேற்கொண்ட குடிமராமத்து பணிகளாலும், பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அனேக மாவட்டங்களில், கடந்த ஆண்டு இருந்த நிலத்தடி நீர் மட்டத்தை விட, இந்த ஆண்டு நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, சேலத்தில், கடந்த ஆண்டு இருந்த நீர் மட்டத்தை விட கூடுதலாக 4.8 மீட்டருக்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில், 3.08 மீட்டரும் பெரம்பலூரில் 2.83 மீட்டரும், புதுக்கோட்டையில் 2.57 மீட்டரும், நீர் மட்டம் அதிகரித்துள்ளது. நாகப்பட்டிணத்தில் 2.21 மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.16 மீட்டரும், கடந்த ஆண்டை விட கூடுதலாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதே போன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
Discussion about this post