அழிந்துவரும் தூக்கணாங்குருவி இனத்தை பாதுகாக்க, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டின் கூரையில் குருவிகள் கூடு கட்டி, அதைப் பார்த்து வளர்ந்த காலம் போய், தற்போது குருவிகளையே தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவம் வாய்ந்த தூக்கணாங்குருவி இனங்கள் தற்போது அழிந்து வருகின்றன.இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த கீழத்தூவல் கிராமத்தில், தற்பொழுது மழை பெய்து குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், குளத்தின் நடுவில் உள்ள கருவேல மரங்களில், அதிக அளவிலான தூக்கணாங்குருவி கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன.
மிக நேர்த்தியாக கூடு கட்டும் ஆண் தூக்கணாங்குருவி, தன் இணையை கூட்டி வந்து கூட்டை காண்பிக்கும். அதற்கு அந்த கூடு பிடித்திருந்தால் மட்டுமே, அந்த ஆண் குருவியை இணையாக ஏற்றுக்கொள்ளும்.
பொறியாளர்கள் போல், கூட்டை மிக நேர்த்தியாக கட்டும் இப்பறவைகள், இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால், அழிந்து வரும் தூக்கனாங்குருவி இனத்தை பாதுகாக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post