பாகிஸ்தானில் உணவு பொருட்கள் விலை உயர்வுக்கு இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை ரத்து செய்ததே காரணம் என அந்நாட்டு பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் ஹமத் அசார் குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் விரக்தி அடைந்த பாகிஸ்தான் அரசு, உடனடியாக இந்தியாவுடனான வர்த்தக ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. இதனால் பாகிஸ்தானில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ தக்காளி 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் அந்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Discussion about this post