நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 20 புள்ளி 9 பில்லியன் டாலராக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2018-2019ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய முதலீடுகளின் மதிப்பு 17 பில்லியன டாலராக இருந்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 20 புள்ளி 9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். வெங்காயம் இருப்பு குறித்து கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டிசம்பர் 2ந் தேதி வரை 57 ஆயிரத்து 372 புள்ளி 90 மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பு மத்திய அரசின் கைவசம் உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post