ரபேல் ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியுள்ளார்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரபேல் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்திய விமானப்படைக்கு 126 விமானங்கள் தேவை என்றிருக்கும்போது 36 விமானங்களுக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா அரசு தேசிய பாதுகாப்பை முழுவதும் சமரசம் செய்து, இந்திய விமானப்படையை சிதைத்துள்ளது என்றார். மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளது என்றும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரசாந்த் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post