இந்தியாவிலும் இளைஞர்களை ஈர்க்கும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ஷோரூம் தற்போது காஷ்மீரில் திறக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்கள் சாதாரண மோட்டார் பாதிப்புகளை விட புல்லட் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் ராயல் என்ஃபீல்டு ஹார்லி டேவிட்சன் போன்ற ஷோரூம்கள் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல இளைஞர்களை கவரும் விதத்தில் இந்த நிறுவனங்கள் பல்வேறு மாடல்களில் புல்லட் பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன .மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள் ஆக இருக்கக் கூடிய ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் தற்போது இந்தியாவிலும் தன்னுடைய முத்திரையை தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது இளைஞர்களின் கவனம் இந்த பைக்குகள் மீது திரும்புவதால், இந்தியாவின் பல மாநிலங்களில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தன்னுடைய ஷோரூம்களை திறந்து வருகிறது.
இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்கின் 26 ஷோரூம்கள் ஏற்கனவே இருக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீரில் இருசக்கர வாகனங்களுக்கு தனியான சந்தை இருப்பதாலும், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதாலும் ஹார்லி டேவிட்சன் ஷோரூம் கஷ்மீரில் தொடங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post