திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் திடீரென மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி கல்லுக்குழி அருகே உள்ள முடுக்குபட்டி பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது இளைய மகன் கணேசமூர்த்தி காய்ச்சல் காரணமாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருந்த நிலையில், மருத்துவமனையின் 6வது தளத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை திடீரென மருத்துவமனையின் 6வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கும், மருத்துவ நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post