திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு விமானம் மூலம் ரூ. 21.56 லட்சத்தை கடத்த முயன்ற பெண்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்..
திருச்சி விமான நிலையத்திலிருந்து, விமானம் மூலம் மலேசியாவிற்கு செல்ல இருந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த பாதர் ரேஷ்மி மற்றும் தாசினாபேகம் ஆகிய இரு பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்த போது, அவர்களிடமிருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்த இந்திய பணமும், மலேசிய ரிங்கிட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்திய பணத்தின் மதிப்பு 8. 26 லட்ச ரூபாய் என்றும், மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 13. 30 லட்ச ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, மலேசியாவிற்கு பணம் கடத்த முயன்ற பெண்களை கைது செய்த மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post