தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள், வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் டிச-3 ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுவதை குறிப்பிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரம் உயர தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.
அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்தி மற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post