அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் திறக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 23 காவல் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்களை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, காவல் நிலையங்களில் நூலகங்கள் திறக்கப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் காவலர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையமும். அடுத்தபடியாக சென்னை அண்ணா நகர் காவல் நிலையமும் தேர்ந்து எடுக்கப்பட்டதை சுட்டிக் காட்டினார். தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு சிறந்த முறையில் உள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
Discussion about this post