பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் சாலைகளை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1 கோடியே 67 லட்சம் மதிப்பில் இந்தப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான பூமி பூஜையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் வினோத், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீ. பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் பெரம்பலூர் அருகே உள்ள ஆலத்தூர் வட்டம் சாத்தனூர் குடிகாடு கிராமத்தில் 2 கோடியே 38 லட்ச மதிப்பீட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.
Discussion about this post