அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் முதல் முறையாக நீலத் திமிங்கலத்தின் இதய துடிப்பை பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
கடல்வாழ் உயிரினங்களிலேயே மற்ற உயிரினங்களை விட நீலத் திமிங்கிலம் தான் மிகப் பெரியது . இதன் இதயத் துடிப்பை
இது வரை எவரும் அளவிடாத நிலையில், முதல் முறையாக அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நீலத் திமிங்கிலத்தின் இதய துடிப்பை பதிவு செய்துள்ளனர்.
இதன் துடுப்புக்கு இடப் பகுதியில் ஒரு உணரியை ஒட்டவைத்து, நீலத் திமிங்கிலத்தின் இதயத் துடிப்புகளை துல்லியமாக பதிவு செய்துள்ளனர். கடலுக்குள் இரை தேடும் போது ஒரு நிமிடத்திற்கு நான்கு முதல் எட்டு முறையும், கடல் மேல்பகுதியில் வந்து சுவாசித்துவிட்டு திரும்பும் போது நிமிடத்திற்கு 37 முறையும் துடிக்கிறது என கண்டறிந்துள்ளனர்.
மேலும் ஓய்வு நேரத்தின் போது இரண்டே முறைதான் இதயம் துடிப்பதாக பதிவு செய்துள்ளனர். அடுத்த முறை திமிங்கிலத்தின் இதயப் பகுதியில் ஒரு வேகமானியை உணரிகளுடன் இணைத்து, ஆராய்ச்சி செய்ய இருப்பதாக ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post