தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலமாகவும், புனித தலமாகவும் விளங்கும் சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ள வனத்துறையினர், அருவியில் இருந்து விழும் தண்ணீரின் அளவு குறைந்தால் மட்டுமே மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Discussion about this post