காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ,00 1 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும், மேட்டூர் அணைக்கு 6 ஆயிரத்து 43 கன அடியாக இருந்த நீர்வரத்து, 6 ,001 கன அடியாக குறைந்தது. காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு, 5 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு, 700 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Discussion about this post