நுரையீரல் புற்றுநோய் உள்ளதா என்பதை கைவிரல்களை வைத்தே நாம் கண்டறிய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,
சமீபத்தில் (UK)யூகே கேன்சர் ரிசர்ஜ் மையத்தின் மருத்துவர்கள், ஒரு ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளனர் , அந்த ஆய்வு அறிக்கையில், எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் வீட்டில் இருந்தப்படியே தங்களது கை வீரல்களைக் கொண்டு , நுரையீரல் புற்றுநோய் உள்ளதா என்பதை அறியலாம் என்று கூறியுள்ளனர். கை விரல்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு இரண்டு கைகளிலும் உள்ள விரல்களை ஒன்று சேர்த்து, இடது கை ஆள் காட்டி விரலையும், வலது கை ஆள்காட்டி விரலையும் இடிப்பது போல பிடித்து வைத்தால், நகப்பகுதிகள் சேராமல் வைரக் கல் போல இடைவெளி தெரிய வேண்டும்.
இதுபோலவே, மற்ற விரல்களையும், அதன் இடது , வலது ஜோடி விரல்களுடன் முன்புறம் அழுத்தி வைத்துப் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது வைரம் போன்ற இடைவெளி தெரியாமல், விரல்களின் நகப்பகுதி ஒன்றோடு ஒன்று ஒட்டுவது போல காணப்பட்டு இருந்தால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சில மனிதர்களின் கை விரல்கள் தடித்தும், விரல்கள் வளைந்து மெலிந்தும் காணப்படும்,இதுமட்டுமல்லாமல் விரல்களின் முனைகள் பெரிதாகி வருவது போன்றவை நுரையிரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றங்கள் விரல் கிளப்பிங் என்று அழைக்கப்படுகின்றன. உலக மக்களின் 35 சதவிகிதம் பேருக்கு இந்த நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post