இத்தாலி பராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உறுப்பினர் ஒருவர், தன் தோழியிடம் காதலை தெரிவித்தார்.
இத்தாலி நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஃப்ளாவியோ டி மியூரோ என்ற எம்.பி தன்னுடைய வாதம் வந்த போது பொதுமக்கள் கேலரியில் அமர்ந்திருந்த தன்னுடைய பெண் தோழியிடம் திருமணம் செய்து கொள்வாயா? என்று திடீரென கேட்டு அவையில் இருந்தோரை ஆச்சரியப்பட வைத்தார்.அவருக்கு அவையில் இருந்த சக உறுப்பினர்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சபாநாயகர், “உங்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நாடாளுமன்றத்தை இவ்வாறு பயன்படுத்தக் கூடாது என கேட்டுக் கொண்டார்.
Discussion about this post