கிரிக்கெட் போட்டிகளில் கீரிஸ் நோபால்களைக் துல்லியமாகக் கண்காணிக்க புதுவகை கேமரா தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோதின. பரபரப்பான இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. போட்டியின் கடைசி பந்தில் வெற்றி பெற பெங்களூர் அணிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் மும்பை அணியின் லசித் மலிங்கா வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்க முடியாமல் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது. ரீ பிளேயில் மலிங்கா கிரீஷிற்கு வெளியே கால் வைத்து நோபால் வீசியது தெரிய வந்தது. அம்பயர் நோபாலை சரியாக கவனிக்காமல் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பெங்களூர் அணியின் கேப்டன் வீராட் கோலி அம்பயரை சரமாரியாக விமர்சனம் செய்தார்.
பெரும்பாலான ஆட்டங்களில் இதுபோன்ற கிரீஷ் நோபால்கள் சரியாக கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. ஆஸ்திரேலிய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 21 நோபால்கள் வீசப்பட்டதாகவும் அம்பயர் கவனிக்கவில்லை என்றும் சர்ச்சைகள் வெளியாகியுள்ளன. இந்த தவறுகளை சரிசெய்ய புதுவகை கேமிரா தொழில்நுட்பத்தை பிசிசிஐ கையில் எடுத்துள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ், ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் புதிய கண்டுபிடிப்புகளைக் அறிமுகப்படுத்தி வருகிறோம் என்றும் முடிவுகளை துல்லியமாக வெளியிட புதுவகை தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆர்வமாக உள்ளோம் என்றும் தெரிவித்தார்
ஏற்கனவே இந்தியா பங்களாதேஷ் இடையே நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்த தொழில்நுட்பம் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியா வெஸ்ட் இண்டிஸ் இடையே தொடரிலும் நோபாலைக் கண்காணிக்க கேமிரா தொழில்நுட்பத்தை பிசிசிஜ அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ரன் அவுட்டிற்கு பயன்படுத்தப்படும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கேமிராக்கள் ஒரு செக்ண்ட்டிற்கு 300 பிரேம்கள் வரை படமெடுக்கும். எடுக்கப்பட்ட படங்களை பெரிதாக்கி ஆராயவும் முடியும்.
இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால் அடுத்த ஐபிஎஸ் தொடரில் க்ரீஷ்நோபாலைக் கண்காணிக்க தனியாக ஒரு அம்பயர் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Discussion about this post