கல்வராயன் மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கோமுகி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது முழுகொள்ளவை எட்டியுள்ளது. மேலும், மணிமுத்தாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் விவசாயதிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் அப்பகுதியை நீர் நிலைகள் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post