ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்று, பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது தந்தையை வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, கடந்த 12 -ம் தேதி பரோலில் வெளி வந்த பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், ஆஸ்துமா மற்றும் உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர்.
அப்போது, தனது தந்தையோடு காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளனும் வந்திருந்தார். பின்னர், பேரறிவாளனே தனது தந்தையை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். இதனையடுத்து, சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் அவரது இல்லத்திற்கே பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார்.
Discussion about this post