உலகத்தின் ஒரே ஒரு பகுதியில் உயிர்வாழும் சூழலே இல்லாதது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதியில் குளிர்காலத்தின் போது கூட மிக அதிக அளவாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களிலேயே உயிர் வாழும் சூழல் உள்ள ஒரே கோளாக பூமி விளங்குகிறது. பூமியிலும் ஒரே ஒரு பகுதியில் உயிர்வாழும் சூழலே இல்லாததை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Nature Ecology and Evolution என்ற அறிவியல் சார்ந்த தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையில் அண்மையில் வெளியான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் இத்தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எத்தியோப்பியாவின் டல்லோல் பகுதியில் சோதனை மேற்கொண்ட ஆராச்சியாளர்கள் அங்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வெப்பம் உள்ளதாகவும், நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான அடிப்படை முகந்திரமே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தென்றல் காற்று வீசும் குளிர்காலத்தில் கூட மிக அதிக அளவாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீசுவதாக ஆராய்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சில எரிமலைகளிலிருந்து விஷ வாயுக்கள் வெளியாவதும், தீவிர நீர் வெப்ப செயல்பாடு அரங்கேறுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது எத்தியோபியாவில் உள்ள டல்லோல் பகுதி மட்டும் தான் உயிரினங்கள் வாழ தகுதியில்லாத பகுதியாக உள்ளது. வரும் காலங்களில் பூமியில் உள்ள எந்த பகுதிகள் வேண்டுமானலும் உயிரினங்கள் வாழ தகுதியில்லாத பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post