ஜார்க்கண்ட் தனி மாநிலக் கோரிக்கையை காங்கிரஸ் அரசு பரிசீலிக்கவில்லை எனவும், பாஜக ஆட்சியில்தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சத்ரா என்னுமிடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்க வேண்டும் என இளைஞர்கள் போராட்டம் நடத்தியபோது காங்கிரஸ் தலைவர்கள் என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை மக்களின் கோரிக்கையைப் பரிசீலிக்கவில்லை எனவும், பாஜக ஆட்சியில்தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதாகவும் அமித் ஷா தெரிவித்தார். தேநீர்க்கடைக்காரரின் மகன் பிரதமராக வர வேண்டும் என ஜார்க்கண்ட் மக்கள் வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார். ஏழை மக்களின் வலியை உணர்ந்த பிரதமர், சத்ரா சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 73 ஆயிரம் கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
Discussion about this post