கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 43 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி-யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க விதிக்கபட்ட தடை 113-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post