ராதாபுரத்தில் குடிநீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு, 160 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு வீணாக செல்லக்கூடிய நீரை தடுப்பணை அமைத்து நீரேற்று நிலையம் மூலம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை தலைவர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பழைய ஆற்றில் நீர்வள ஆதாரத்துறை தலைவர் சத்யகோபால் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில், ஆற்றிலிருந்து நீரேற்று குழாய் மூலம் ராதாபுரத்தில் குடிநீர் வழங்குவது சம்பந்தமான ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யகோபால், தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கடலுக்கு வீணாக செல்லக்கூடிய தண்ணீரை தடுத்து குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
Discussion about this post