கொல்கத்தாவில் காய்கறி கடைக்குள் புகுந்த திருடர்கள் வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை காரணமாக விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு என வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவில் அக்சயா தாஸ் என்பவர் சொந்தமாக காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த செவ்வாய்கிழமை திருடர்கள் புகுந்தனர். புதன்கிழமை காலை வழக்கம் போல கடைக்கு வந்த அக்சயா தாஸ் கடையின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அவருக்கு இன்னும் பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம், உள்ளே புகுந்த திருடர்கள் அங்கே கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடி சென்றுள்ளனர். கிட்டதட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயத்தை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் மிகுந்த வேதனை அடைந்த அக்சயா தாஸ் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post