இந்தியாவின் கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்திலிருந்து, இன்று காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆயிரத்து 625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கிலோ மீட்டர் தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயர் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது. இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.
Discussion about this post