தமிழகம் முழுவதும் முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வில் ஆயிரத்து 758 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது…
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுகலை கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆன்லைன் தேர்வு நடைபெற்றது. இதில் 26 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிட்டது. அதன்படி ஆன்லைன் தேர்வெழுதியவர்களில் ஆயிரத்து 758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 814 முதுகலைக் கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தரவரிசையின் அடிப்படையில், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Discussion about this post