ஆசிரமத்தில் உள்ள சிறார்களுக்கு நித்தியானந்தா துன்புறுத்தியதாகக் கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இருந்த சிறார்களைப் பெற்றோரின் ஒப்புதல் இன்றிக் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்குக் கடத்திச் சென்றதாக நித்தியானந்தா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த குஜராத் காவல்துறையினர் ஆசிரமத்தில் இருந்து சிறாரை மீட்டதுடன், நிர்வாகிகள் இருவரைக் கைது செய்தனர். நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் நித்தியானந்தா சிறார்களைத் துன்புறுத்தியதைத் தான் பார்த்ததாகக் கனடாவைச் சேர்ந்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். சாரா ஸ்டெபானி லாண்ட்ரி என்னும் இயற்பெயரைக் கொண்ட அந்தப் பெண் ஸ்ரீநித்திய சொரூப பிரியானந்தா என்னும் பெயரில் ஆசிரமத்தில் பல ஆண்டுகளாகத் தங்கியிருந்ததாகவும், சிறார்கள் இருவருக்கு நிகழ்ந்த கொடுமையை நேரில் கண்டதே தனது மனமாற்றத்துக்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். சிறார்கள் இருவரும் பட்டினி போடப்பட்டதுடன், மனிதத்தன்மையற்ற முறையில் தாக்குதலுக்கு உள்ளதானதாகவும் கனடா பெண் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post