விழுப்புரத்தில் முதலமைச்சர் திறக்கவுள்ள புதிய சட்டக் கல்லூரிக்கான கட்டிடத்தையும், விழா ஏற்பாடுகளையும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் திரு.வி.க வீதியில் இயங்கி வரும் சட்டக்கல்லூரியின் புதிய கட்டிடங்கள் சாலாமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 5.5 ஏக்கர் பரப்பளவில் 69 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறக்கவுள்ளார். இந்த நிலையில், புதிய கட்டிடங்களையும், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளையும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் நூற்றாண்டு விழா காணும் விழுப்புரம் நகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சீரமைக்கவுள்ள குளத்திற்கான இடத்தினையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அதிமுக நிர்வாகிகள் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Discussion about this post