மரபணு மாற்றங்களால் 12 கை விரல்கள் மற்றும் 20 கால் விரல்களுடன் பிறந்த மூதாட்டியை சூனியகாரி என உறவினர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் கடப்படா கிராமத்தில் குமாரி என்னும் மூதாட்டி வசித்து வருகிறார். 65 வயதாகும் இவர் 12 கை விரல்கள் மற்றும் இரு கால்களிலும் 20 விரல்களுடன் கொண்டு பிறந்துள்ளார். இவ்வாறு பிறந்த மூதாட்டியை உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்த குறையை சரி செய்ய போதிய பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் அப்படியே மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். இவரை சூனியகாரி என உறவினர்கள் விமர்சித்து வந்துள்ளனர். இதனால் மூதாட்டிவீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார். இந்த பிறவி குறைபாடுகளுக்கு காரணம் மரபணு மாற்றங்கள் எனவும் இந்த மாதிரியான குறைகள் 5,000 பேரில் ஒருவருக்கு ஏற்படும் எனவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Discussion about this post