கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட டெஸ்லா சைபர் டிரக்கிற்கு இதுவரை 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது டெஸ்லா சைபர் டிரக் வாகனம். அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா வாகனம் மின்சார கார் தயாரிப்பில் அசத்தி வருகிறது. டிசைன், பல்வேறு தொழில்நுட்பங்கள் என டெஸ்லாவை அடித்துக்கொள்ள வேறு எவரும் இல்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் டெஸ்லா சைபர்டிரக் என்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. பிக்கப் டிரக் மாடலில் உள்ள இந்த காரில் குண்டு துளைக்காத ஜன்னல் கண்ணாடிகள், அதிக பாரம் சுமக்கும் திறன், நீண்ட தூரம் பயணிக்கும் வாய்ப்பு என டெஸ்லாவின் சிறப்பம்சங்களால் ஆட்டோமொபைல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதன் 100 டாலர்கள் முன்பணத்துடன் சைபர்டிரக்கின் முன்பதிவு தொடங்கியது. அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் சைபர்டிரக்கின் இரண்டு மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு 42%, மூன்று மோட்டார்கள் கொண்ட மாடலுக்கு 41 %, ஒற்றை மின் மோட்டார் பொருத்தப்பட்ட மாடலுக்கு 17 % பேரும் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post