சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் விலை கிலோ 100 ரூபாயை எட்டி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து தினமும் 60 லாரிகள் வரை வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 30 லாரிகள் வரை மட்டுமே வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. இதனால் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன் வெங்காயம் கிலோ 70 ரூபாயாக விற்ற நிலையில் தற்போது 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
சாம்பார் வெங்காயமும் கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெங்காயம் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post