உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் காய்கறிகளில் முக்கியமானது பீட்ரூட். இதில் இரும்புச்சத்து வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் இருப்பதால் உடம்பில் இருக்கும் ரத்த அணுக்களை சீராக்கும்.பீட்ரூட்டினால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்பட்டாலும்,அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரியுமா?
எந்த ஒரு காய்கறியும், பழமும் தீங்கானது அல்ல .அதனை நாம் எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் பலன் இருக்கிறது.
பீட்ரூட்டில் அதிக அளவு மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம் பாஸ்பரஸ் உள்ளது. இவை உடலுக்கு நல்லதுதான். ஆனால் இவை அனைத்துமே உலோக சேர்மங்கள் ஆகும். எனவே பீட்ரூட்டை அதிகம் உட்கொள்ளும் போது கல்லீரல் மற்றும் கணையத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் பீட்ரூட்டில் ஆக்ஸ லைட் டுகள் அதிகமாக உள்ளது .இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வழிவகுக்கும்.
மேலும் சிலருக்கு பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் தடிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம். எனவே பீட்ரூட்டை அளவாக எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது என ஆய்வில் கூறப்படுகின்றது.
Discussion about this post