இந்தியாவுக்கெதிரான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 2 வது நாள் முடிவில், வங்கதேச அணி 152 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா – வங்கதேசம் இடையேயான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவில் தொடங்கியது. இதில், முதலில் பேட் செய்த வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் குவித்தது. 2 ஆம் நாள் ஆட்டத்தில், சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் ரன்களை குவித்தனர். ரஹானே 51 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி 18 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம் தனது 22 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
Discussion about this post