மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 745 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணை நீர்மட்டம் 72.60 அடியை எட்டியுள்ளது. பாபநாசம் அணைக்கு 2 ஆயிரத்து 470 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 137.5 அடியாகவும், சேர்வலாறு அணை 149.57 அடியாகவும் உள்ளது. ஏற்கனவே பராமரிப்பு பணி காரணமாக சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை விதித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாக மணிமுத்தாறு அணை பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post