ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள செண்பகதோப்பு அருவியில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாலை நேரத்தில் பெய்த கனமழையால் செண்பகத்தோப்பு மீன் வெட்டி பாறை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் அருவியில் குளிக்க சென்ற இளைஞர்கள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தின் முன்பு செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
Discussion about this post