பெரியகுளம், தென்கரையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஆள்க்கடத்தலில் ஈடுபட்ட 3பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தயாளன் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனப் பணிமனையில் கொடைக்கானலைச் சேர்ந்த விஜய் என்பவர் தென்கரை தனியார் விடுதியில் தங்கியிருந்து மெக்கானிக்காகவும், கார் வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் இவர் மதுரையைச் சேர்ந்த கார்த்தி, இசக்கி ராஜா, மற்றும் பூப்பாறையைச் சேர்ந்த கணேஷ் ஆகியோரிடம் கார் வாங்கிய பணம் 25000 ரூபாயை தராமல் விஜய் இழுத்தடித்ததாகத் கூறப்படுகிறது.
இந்நிலையில் பெரியகுளம் பகுதியில் இருந்த விஜயைக் மூவரும் சேர்ந்து காரில் கடத்திக் கொண்டு சென்றனர். மேலும் கடத்திய மூவரும் விஜயை அடித்துக் துன்புறுத்தியதாகத் கூறப்படுகிறது. பின், விஜய் பணி புரிந்த ஓர்க்ஷாப் உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல் காரர்கள் விஜயை நாங்கள் தான் கடத்தி வைத்துள்ளோம். நீ மட்டும் 20,000 பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு விஜயைஅழைத்துச் செல் ,இல்லையென்றால் விஜய்யின் கை, கால்களை முறித்து விடுவோம். எனத் தெரிவித்துள்ளனர்.
சுதாரித்துக் கொண்ட ஓர்க்க்ஷாப் உரிமையாளர் தயாளன், உடனடியாக தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் ஆய்வாளர் முத்துமணி, சார்பு ஆய்வாளர் அசோக், மற்றும் ராஜா கொண்ட தனிப்படைஇவர்களை வலை வீசித் தேடிய போது இடத்தை மாற்றி, மாற்றித் தகவல் சொல்லி அலைக்கழித்துள்ளனர். ஒரு வழியாக மதுரை வாடிப்பட்டியில் இருப்பதாகவும், தயாளன் மட்டும் தனியாக வரவேண்டும் என அவர்கள் தெரிவித்ததின் அடிப்படையில் காவல்துறையினர் தயாளனை மட்டும் தனியே அனுப்பி அவர்களைப்பின் தொடர்ந்தனர்.அவர்கள் வந்த காரில் தயாளனை ஏற்றிக் கொண்டு கிளம்பிய காரை மடக்கிய காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து பெரியகுளம் அழைத்து வந்தனர், இவர்களை விசாரித்த காவல்துறையினர் ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 1. கார்த்தி 2. இசக்கிராஜா, 3. கணேஷ் ஆகியோரைச் சிறையிலடைத்தனர். படுகாயமடைந்த மெக்கானிக் விஜய் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post