இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது. இந்தியா விளையாடப்போகும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இது தான். இந்த போட்டியில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?
கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் மீது ரசிகர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது என்றே கூறலாம் .அலுவலக வேலை நேரத்தில் போட்டி நடப்பதால், டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்கள் வருகையை பாதித்தது. இதையெல்லாம் கவனத்தில் கொண்ட ஐசிசி, டெஸ்ட் போட்டிகளை மேலும் சுவாரசியமாக்கும் முயற்சியா பகல்/இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகம் செய்தது. இரவு நேரத்தில்… மின்னொளி வெளிச்சத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை தெளிவாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக சிவப்பு நிறப் பந்துக்கு பதிலாக பிங்க் வண்ண பந்துகளை இவ்வகை போட்டிகளில் உபயோகித்தனர்.
ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையே 2005ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கிய டெஸ்ட் போட்டி தான், கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக நடந்த பகல்/இரவு டெஸ்ட் போட்டியாகும். இதுவரை 11 பகல்/இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா 5 போட்டியில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பகல்-இரவு மோதலாக தொடங்குகிறது.இந்திய அணி விளையாடும் முதல் பகல்/இரவு டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடிக்கிறது. அது மட்டுமல்ல, இந்தியாவில் நடைபெறும் முதல் பகல்/இரவு டெஸ்ட் என்ற பெருமையும் இந்த போட்டிக்கு கிடைக்கிறது. இப்போட்டிக்காக ஈடன் கார்டன் மைதானம் முழுவீச்சில் தயாராகிவரிகிறது.
பகல் இரவு டெஸ்ட் போட்டி பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கும்.
40 நிமிட உணவு இடைவேளைக்குப் பிறகு 3.40க்கு ஆட்டம் தொடரும்போது மின்விளக்குகள் எரியத் தொடங்கும்
மாலை 5.40க்கு தேநீர் இடைவேளை. பின்னர் 6.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரையில் போட்டி நடைபெறும்.
நான்கு ஆண்டுகளாக ‘பிங்க்’ பந்து சோதனையை இந்திய அணி தவிர்த்து வந்த நிலையில் இந்த முறை போட்டியில் பிங் கலர் பந்து பயன்படுத்தபடுவது இதனுடைய கூடுதல் சிறப்பு. வரலாற்று சிறப்பு மிக்க பகல் இரவு டெஸ்ட் போட்டியை காண்பதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்தோட காத்திருகின்றனர்..
Discussion about this post