உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களில் 189 நாட்களில் ஏறி நேபாள வீரர் உலக சாதனை படைத்துள்ளார். நிர்மல் நிம்ஸ் புர்ஜால் என்பவர் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். மலையேறும் முயற்சிக்காக கேட்கப்பட்ட விடுப்பிற்கு அனுமதி கிடைக்காததை அடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு மலையேறும் சாகசத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த பயண செலவிற்காக தனது சொந்த வீட்டையும் விற்றுள்ள நிர்மல் நிம்ஸ், 8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட எவரெஸ்ட், பிராட் பீக், ச்சோ யூ போன்ற 14 சிகரங்களையும், குறைந்த காலத்தில் ஏறி, முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
Discussion about this post