ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்துத்தான் ஒரு நாட்டின் ஆரோக்கியத்தை கணக்கிடுகின்றனர். ஆனால் பிறந்தது முதல் 40 விழுக்காடு பச்சிளங் குழந்தைகள் ஒரு வாரத்துக்குள்ளும், 60 விழுக்காடு குழந்தைகள் ஒரு மாதத்துக்குள்ளும் உயிழப்பதாக ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன.
குழந்தை பிறப்பின்போதும், பிறந்த முதல் வாரத்திலும் கூடுதல் பராமரிப்பு தேவை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பிறந்த குழந்தை பராமரிப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. பிரசவம், பிறப்பு மற்றும் பிறந்த பிற்காலம் ஆகியவையே தாய்-சேய் நலனுக்கான முக்கிய காலக்கட்டமாகும். கற்பமாவதற்கு முன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண் தயராக இருந்தால் மட்டுமே கர்பம் தரிக்க வேண்டும் என்கிறார் பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை பிரிவு நிபுணர் சந்திரகுமார்.
பொதுவாக குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிரிழப்புகளை தடுக்க வழிமுறைகள் உள்ளதாக குறிப்பிடும் மருத்துவர், இது தொடர்பான விழிபுணர்வு மக்களுக்கு அவசியம் தேவை எனவும் கூறியுள்ளார்.
அதேபோல், குழந்தை பிறந்ததும் உடனடியாக தாய்ப்பால் மட்டுமே ஊட்ட தொடங்க வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆலோசனை ஒரு புறம் இருக்க, பிறந்த குழந்தையை தாயின் வயிற்றின் மீது வைத்துவிட்டாலே, குழந்தை தானாகவே தவழ்ந்து சென்று பாலை குடிக்க ஆரம்பித்துவிடும் என்கிற தகவலையும் மருத்துவர்கள் முன் வைக்கின்றனர்.
திருமணமாகும் பெண்கள் 40 கிலோ எடைக்கு மேல் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை ஆகிய மூன்றும் சரியான அளவில் பெண்கள் பராமரித்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்குகின்றனர்.
கர்ப்பம் தரித்த உடனே மருத்துவரை அனுகுவது சிறந்தது எனவும் மருத்துவரிடம் குறித்த நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வது கர்ப்பிணி பெண்களின் கடமை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறைபாடு உடைய குழந்தைகளை பிறப்பதற்கு முன்பே கண்டறிந்து ஆரோக்கியமான குழந்தையாக பிறப்பத்தற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்ற கருத்தையும் மருத்துவர்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.
Discussion about this post