டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் புகைமூட்டத்தால் காற்றின் தரம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பின் வைக்கோலை விவசாயிகள் எரிப்பதாலும், ஆலைப்புகை, வாகனப் புகை ஆகியவற்றாலும் டெல்லியில் காற்று கடுமையாக மாசுபட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின் படி மிக மோசமான அளவுக்குக் காற்று மாசுபட்டுள்ளது. இத்துடன் பனிமூட்டமும் சேர்ந்துள்ளதால் பார்வைப் புலப்பாட்டுத் தொலைவு மிகவும் குறைந்துள்ளது. இதனால் காலையிலும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகனங்கள் சென்றன. புகைமூட்டத்தால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகிய பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
Discussion about this post