ஷிம்லா மாவட்டத்தில் கூடு ( Kuddu ) என்ற அருகே இந்த விபத்து நேரிட்டது. கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. மலைப் பகுதியில் அதிவேகமாக ஜீப் சென்றதே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
Discussion about this post