முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில், விரைவில் அதிமுகவில் இணைய இருப்பதாக, அமமுகவின் கர்நாடக மாநில பொறுப்பாளரும், அதிருப்தியாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில், புகழேந்தியின் ஆதரவாளர்கள் பங்கேற்ற தஞ்சை மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தஞ்சையில் அமமுக-வை கலைத்து விட்டதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக புகழேந்தி கூறியுள்ளார். மேலும், தினகரன் தொடர்ந்து கட்சியை நடத்தினால் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, தினகரன், தான் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி சொத்துக்களை காப்பாற்றவே கட்சியை நடத்தினார் என்று குற்றம்சாட்டினார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில், விரைவில் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் புகழேந்தி கூறினார்.
Discussion about this post