தமிழ் , தெலுங்கு, மலையாளம் இப்படி அனைத்து மொழிகளிலும் வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படம் மூலம் 2013 ஆம் ஆண்டு அறிமுகமானார்.பின்பு 2015ம் ஆண்டு ’இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்தார்.முதல் படத்தில் கீர்த்தி சுரேஷ் அதிகமாக பேசபடவில்லை என்றாலும், அடுத்தடுத்து வெளிவந்த ரஜினி முருகன், ரெமோ,பைரவா திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
பின்பு 2018ம் ஆண்டு இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான மகாநதி திரைப்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்து கவுரவித்தது.இப்படி திரைத்துறையில் தனக்கென அடையாளத்தை உருவாக்கி கொண்டிருக்கும் கீர்த்தி மனம் உருகி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்’6 வருடத்திற்கு முன்பு நடிகையாக பிறந்தேன்.தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்ததற்கு நன்றியுடன் இருக்கிறேன்.என்னுடன் இருக்கும் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி.உங்களுக்கான ஒரு இருக்கையில் அமர்ந்து பாப் கானை எடுத்துக்கொள்ளுங்கள், நான் போவதற்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது’என கூறியுள்ளார்.
6 years ago, I was born as an Actor.
I’m super grateful to be having the opportunities that come my way over and over again. Eternally thankful to my fraternity, family and well wishers.Take a seat and grab your popcorns.
You and I have a long way to go ❤ pic.twitter.com/ylbM2pzdpJ— Keerthy Suresh (@KeerthyOfficial) November 16, 2019
Discussion about this post