ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக காவல்துறையில் பணியாற்றும் இளைஞர் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி பகுதியை சேர்ந்த மணிமுத்து என்ற இளைஞர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் வத்திராயிருப்பு – அழகாபுரி முக்கிய சாலையில் கண்ணை கட்டிக்கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடம் 12 வினாடியில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். இதனை நோபல் வேர்ல்டு ரெகார்டு குழு அவரது சாதனையை அங்கீகரித்து, அதற்கான சான்றிதழை வழங்கினர். இதுவரை இந்த சாதனையை யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post